எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

அதிமுகவின் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டமானது நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அதிமுகவின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் அதற்காக ராசிபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம்,நாமக்கல் சாலை,சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 50 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் மற்றும் நெடுஞ்சாலை துறை உதவிக்கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமாரிடம் ராசிபுரம் அதிமுக நகர கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மனு அளித்தனர்.

இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை உதவிக்கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமாரிடம் மனு அளிக்க சென்றபோது நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலை சாலையில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி இல்லை எனவும், அதனை மீறி கொடிக்கம்பம் அமைத்தால் அகற்றப்படும் என அதிகாரி தெரிவித்ததால் அதிமுகவினருக்கும், அதிகாரிக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தின் போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவின் சார்பில் நகர் பகுதியில் 50 அடி உயரத்தில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது அதனை நெடுஞ்சாலை துறையில் அனுமதி பெற்று அமைத்தனரா அல்லது ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எம்பிகள் உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்டதா என அதிகாரிகளுக்கும் அதிமுகவினருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுகவினர் அமைத்த கொடிக்கம்பத்தினை அகற்ற வில்லை என்றால் அதிமுகவினர் சார்பில் கொடிக்கம்பம் அமைக்கப்படும் என கூறிவிட்டு அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

அதிகாரிக்கும், அதிமுகவினருக்கும் இடையே சிறிது நேரம் அலுவலகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது…

இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் கந்தசாமி, நகர பொருளாளர் வெங்கடாசலம், குண்டு கோபால், வழக்கறிஞர் பூபதி, முன்னாள் கவுன்சிலர்கள் வாசுதேவன் ஆயில் சீனிவாசன், ஸ்ரீதர், மற்றும் செல்லமுத்து, கார்த்தி, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *