தமிழக விவசாயம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் செல்ல. ராஜாமணி நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்போது அவர் கூறியதாவது: –

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அருதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் சீத்த ராமையா முதலமைச்சரா ? அல்லது டி. கே .சிவகுமார் முதலமைச்சரா ? என்ற போட்டிக்குப் பின்பு இறுதியில் மாநில முதலமைச்சராக சித்ராமையா முதல்வராக பொறுப்பேற்ற பின்பு அவரை பின்னுக்கு தள்ளி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக

அது மட்டும் இல்லாமல் தன்னை கர்நாடக மாநிலத்தின் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக காட்டிக் கொள்ள வேண்டும் என்று
தற்போது கர்நாடகாவில் புதிதாக பொறுபெற்றுள்ள துணை முதல்வரும் பொதுபணித்துறை அமைச்சருமான டி. கே
சிவகுமார்

நேற்று 30.05.2023 அவரது நீர்வளத்துறை அதிகாரிகளை அழைத்து காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு உடனடியாக பணிகளை மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளார்.

மேலும், மேகதாது அணைக்கட்டுவது சம்மந்தமான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகமும் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகமும் இதுவரை இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இவ்வாறு இருக்க கர்நாடகாவின் துணை முதல்வரும்,பொதுப்பணித்துறை அமைச்சருமான டி. கே. சிவக்குமார் கர்நாடகம் -தமிழ்நாடு இருமாநிலங்களிலன் உறவுகளை சீர்க்குலைக்கும் வகையிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகின்ற வகையில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இதனால் இருமாநிலங்களில் பதட்டமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

காவேரியை நம்பியுள்ள அனைத்து விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

மேலும், மேகதாதுவில் அணைக்கட்டும் பொழுது விவசாயிகளின் வாழ்வதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்

காவேரியை நம்பி குடிநீர் வழங்கும் திட்டங்கள் மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உடனடியாக அவசர நிலையைக் கருதி கர்நாடகா அரசுடன் தொடர்பு கொண்டு மேகதாதுவில் நிரந்தரமாக அணைக்கட்டும் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்று தமிழக விவசாய முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு தமிழக விவசாய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் வழக்கறிஞர் செல்வ ராஜாமணி கேட்டுக் கொண்டுள்ளார்

பேட்டியின் போது விவசாய முன்னேற்ற கழகம் மாநில பொதுச் செயலாளர் கே. பாலசுப்பிரமணியம், மாநில அரசியல் உயர்மட்ட குழு தலைவர் இராமசாமி, தலைமை நிலைய செயலாளர் ஆர். மாதேஸ்வரன், மாநில தகவல் தொழில்நுட்ப தலைவர் எஸ் .மாதவன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *