சோழவந்தான்

மதுரை மாவட்டம் அழகர்மலையில் அருள்பாலித்து வரும் சுந்தராஜாபெருமாள் தேனூர் கிராமம் வைகையாற்றில் கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுத்த நிகழ்வு நடந்து வந்துள்ளநிலையில் மதுரை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர் சுமார் 364.ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வினை மதுரைக்கு மாற்றிதால் தற்போது வரை கள்ளழகர் வைகையாற்றி எழந்தரும் நிகழ்வு மீனாட்சி சொக்கர் திருக்கல்யாண வைபவத்துடன் இணைந்து. நடைபெற்று வருகின்றது .

தற்போது பழமை வாய்ந்த தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தராஜாபெருமாள் திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா. நெடுஞ்செழிய பாண்டியன் முயற்சியால் 16.வது ஆண்டாக.வைகாசி பௌர்ணமி நாளான நேற்று காலை 9.30.மணியளவில் சுந்தராஜாபெருமாள் கள்ளழகர் கோலத்தில் பச்சை பட்டுத்தி குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்கினார்.

இவ்விழாவையொட்டி கடந்த மே.19.ந்தேதி திருக்கோயிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும்.ஜுன் 3.ல் தர்மகர்த்தா மண்டபடியிலிருந்து திருஆபரணம் பெட்டி புறப்பாடாகி திருகோயிலை அடைதல் நிகழ்ச்சியும் மாலை சுவாமி புறப்பாடாகி வீதி உலா நிகழ்வும் நடந்தது.

ஜுன்:4.ல் நேற்று திருக்கோயிலிருந்து சுந்தராஜா பெருமாள்.குதிரை வாகனத்தில் புறப்பாடாகி சென்றபோது வீதிகளில் சுவாமிக்கு பொதுமக்கள் அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர் .பின்னர்.காலை 9.30.மணிக்கு தங்கமூலாம் பூசப்பட்ட குதிரை வாகனத்தில் பச்சைட்டுத்தி கள்ளழர் திருகோலத்தில் சுந்தராஜாபெருமாள் வைகையாற்றில் இறங்கினார். இதன்பின்னர் வைகையாற்று மண்டபத்தில்.எழந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. ஜுன் 5.ல் இன்று மாலை 6.மணியளவில் வைகையாற்றில் கருடவாகனத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியும்.இரவு ராஜா அலங்காரத்தில் சுந்தராஜாபெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கு நிகழ்ச்சியும் ஜுன் 6.ல்.நாளை தேனூர் வைகை யாற்றிலிருந்து பூபல்லாக்கில் ஸ்ரீதேவி. பூதேவி சமேதமாக சுவாமி புறப்பாடாகி.வீதி உலா சென்று கோயிலை சேருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது..

இவ்விழா ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழியபாண்டியன் அறங்காவலர் கௌதம்பாண்டியன். உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மேலும் இது குறித்து கோயில் தர்மகர்த்தா நெடுஞ்செழியபாண்டியன் கூறியதாவது::
மண்டூக மகரிஷிக்கு சாப விமோசன கொடுக்கும் நிகழ்வு பலநூறு. ஆண்டுகளாக பழமை வாய்ந்த தேனூர் வைகையாற்றி பகவான் திருமால் கருடவாகனத்தில் சுந்தரராஜா பெருமாள் வடிவில் காட்சியளித்து பாபவிமோசம் அளித்துவந்து உள்ளார்.திருமலைநாயக்கர் மன்னர் காலத்தில் இந்நிகழ்வு மீனாட்சி திருக்க ல்யாணத்துடன் இணைத்து மதுரைக்கு மாற்றப்பட்டு. தற்போது. 364.ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.தேனூர் வைகையாற்றில் பழமை மாறாமல் தற்போது கல் மண்டபம் கட்டுபணிகள் துவங்கப்பட்டு உள்ள நிலையில் மதுரையில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு நடைபெறும் கள்ளழகர் வைபவங்களில் வசந்த விழா போன்ற ஏதேனும் ஒரு நிகழ்வினை பழமையான தேனூரில் நடத்த வேண்டும் எனவும் .தேனூர் வைகையாற்றில் மண்டூகருக்கு மோட்சம் இந்நிகழ்வு மாசி பௌர்ணமியன்று நடைபெற்று வந்து உள்ளதாக கோயில் கல்வெட்டு சான்றுகள் தெரிவிக்கின்றது என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *