திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள தொழவூரில் சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தெய்வ. பாஸ்கரன். இவர் மேல் நிலை படிப்பிற்கு வலங்கைமான் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

பின்னர் ஆசிரியர் பயிற்சி பெற்று முதன் முதலில் அத்திக்கடை அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். அடுத்து பட்டதாரி ஆசிரியராக வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், அடுத்து எண்கண் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், அதன் பிறகு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலக( இடைநிலை) நேர்முக உதவியாளராக வும், அடுத்து ஆலங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், அடுத்து திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளராகவும், தொடர்ந்து வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தான் படித்த பள்ளியிலே தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இது மிகவும் பாராட்டு தக்க நிகழ்வாகும். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கணையாழி அணிவித்து ம், சந்தனமாலை, பொன்னாடை அணிவித்தும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் தெட்சிணாமூர்த்தி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசகர் பா. சிவநேசன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம்,
பொருளாளர் சிங்கு தெரு ராஜேஷ், துணைத்தலைவர் சிவ. செல்லையன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தனித் தமிழ் மாறன், சத்தியமூர்த்தி, நல்லம்பூர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மேலாண்மைக் குழ தலைவர் சுமித்ரா, துணைத் தலைவர் சிவ காஞ்சனா, மற்றும் பள்ளி மேலாண்மைக் குழ உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள், நிகழ்வில் உதவி தலைமையாசிரியர் கலியபெருமாள், முதுகலை ஆசிரியர் ரமேஷ்பாபு, பட்டத்தாரி ஆசிரியை சித்ரா கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். மேலும் மாலை 6.30 மணிக்கு வலங்கைமான் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். முதுகலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு உயர்நிலை, மேனிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் உமாநாத், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் வீரமணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க வலங்கைமான் வட்ட செயலாளர் பாலசுந்தரம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பரசன், தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் பாலு வாழ்த்தி பேசினார்கள். திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் பணி புரிந்த போது ஆசிரியர்களுக்கு செய்து தந்த உதவிகளையும், வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த ஒராண்டு காலத்தில் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதை பாராட்டி பேசினார்கள். முடிவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தெய்வ. பாஸ்கரன் ஏற்புரை நிகழ்த்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *