வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும்- தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு.

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் குளக்கரைகள் சீரமைக்கப்பட்டு படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

இங்கு படகு சவாரிக்கு பல்வேறு வகையான படகுகளுக்கு 200 ரூபாய் முதல் துவங்கி 1000 ரூபாய் வரை கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அதிகம் என படகு இல்லம் அமைத்ததில் இருந்தே பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இக்கட்டணத்தை குறைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் உரிமைத்துறையினர் அதன் மாநில செயலாளர்
இமயம் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில்
மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த விலையானது ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு பாரமாக இருக்குமெனவும், மாநகராட்சி ஆணையாளர் இதில் தலையிட்டு கட்டணத்தை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அவ்வாறு குறைத்தால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என கூறினார். மேலும் அங்கு பார்க்கிங் வசதி இல்லாததால் அடிக்கடி விபத்துகளும், கூட்ட நெரிசலும் ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் கரும்புக்கடை பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதாகவும் அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *