விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மரு.சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், இளங்கோவன், பிரசாத், கொளஞ்சி ,மோகன் மற்றும் கதிரவன் ஆகியோர் கொண்ட குழுவினர் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் அப்பம்பட்டு பகுதி மற்றும் செஞ்சி பேரூராட்சி பகுதியில் விழுப்புரம் சாலை திருவண்ணாமலை சாலை மற்றும் காந்தி பஜார் பகுதியில் உள்ள பழ குடோன்கள்மற்றும் பழக்கடைகளை ஆய்வு செய்யப்பட்டது

ஆய்வில் 300கிலோ செயற்கையாக ரசாயனமூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் அமுகிய நிலையில் கண்டறியப்பட்ட வாழைப்பழங்கள் 200 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது .

மேற்படி ஆய்வில் இரண்டு கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது .மேற்படி ஆய்வின்போது பழ கடை உரிமையாளர்களுக்கு பழங்களை இயற்கையாக பழுக்க வைக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது மேற்படி ஆய்வில் செஞ்சி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் திருமதி பார்கவி , மற்றும் துப்புரவுபணியாளர்கள் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *