ஐக்கிய நாடுகள் சபையின் விருது பெற்ற விஞ்ஞானியுடன் தமிழ் சேவா சங்க நிறுவனர் சந்திப்பு

ஜப்பானின் இயற்கை பண்ணை விவசாய தலைவரும், ஐக்கிய நாடுகள் சபையின் விருதினை பெற்றவருமான விஞ்ஞானி கோய்வாய்‌ , தமிழ் சேவா சங்க நிறுவனர் ஞானசரவணவேல் சந்தித்து இயற்கை பண்ணை விவசாய வழிமுறைகள் பற்றி கலந்துரையாடினார்கள்.

அப்போது கோய்வாய் ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் ( ஜே. ஐ. சி.ஏ), உலகின் பல நாடுகளில் குறிப்பாக மலேசியா, வியட்நாம், சீனா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இயற்கை பண்ணை முறை விவசாயங்களை செயல்படுத்தி, இயற்கை விவசாய வழிமுறைகளை ஊக்குவித்து வருகின்றார்.

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழ் சேவா சங்க நிறுவனர் . ஞானசரவணவேல் ஐக்கிய நாடுகள் சபையின் விருது பெற்ற விஞ்ஞானி கோய்வாய் ஆராய்ச்சியையும், அனுபவத்தையும் தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக, அவரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று விஞ்ஞானி கோகாய் வருகிற ஆகஸ்ட் மாதம் 2024 இந்தியா வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில், இந்தோ ஜப்பான் இணைப்பு நிறுவனமான கே சி சி எஸ் நிறுவனத்தின் நிறுவனர் கருணாநிதி காசிநாதன் உடனிருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *