தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 41 வது வணிகர் பாதுகாப்பு மாநாடு வரும் மே 5 ல் கோவை மாவட்டம் சூலூர் திருச்சி சாலையில் ராவுத்தர் பிரிவில் உள்ள காலி இடத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

அதை மிகைப் படுத்தும் வகையில் தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில தலைவர் அண்ணாச்சி அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார்

நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் சுற்று பயணம் மேற்கொண்டார்

கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில செயலாளர் மகிஷா ரமேஷ்குமார் அவர்களுக்கு மாநாட்டின் அழைப்பிதழ் வழங்கினார்

கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது

தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 41 வது வணிகர் பாதுகாப்பு மாநாட்டில் அனைவரையும் வரவேற்கும் வண்ணம் மாநில தலைவர் அண்ணாச்சி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1000 கொடிகள் மகிஷா ரமேஷ் குமார் அவர்கள் தன் தனிப்பட்ட பங்களிப்பாக கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்

இந்த நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் தங்கச்சாமி மண்டல ஒருங்கிணைப்பாளர் இடையேர்காடு பாஸ்கர் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆத்திச்செல்வன் கலந்து கொண்டனர்

மேலும் கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் மாரிராஜன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபி மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்காயம் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில துணை தலைவர் கண்ணன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத காரணத்தால் அவரது அழைப்பிதழை மாநில செயலாளர் மகிஷா ரமேஷ்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்

நிகழ்ச்சி முடிவில் தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 41 வது வணிகர் பாதுகாப்பு மாநாட்டில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து பெரும் திரளான வியாபாரிகளை அழைத்து வருவதாகவும் அன்று திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் விடுமுறை அளித்து வியாபாரிகள் பெருமளவு ஆதரவு தர வேண்டும் என்று கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில செயலாளர் மகிஷா ரமேஷ்குமார் கேட்டுக் கொண்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *