உலகம்

  • சிவகங்கை தமிழ் இலக்கிய வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா
    சிவகங்கையில் உலக புத்தக தினத்தினை முன்னிட்டு எழுத்தாளர் ஈஸ்வரன், தான் எழுதிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தார். சிவகங்கை தனியார் பள்ளியில், சிவகங்கை தமிழ் இலக்கிய வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய எழுத்தாளர் ஈஸ்வரன், அறிஞர்களும் மேதைகளும் உருவாக புத்தகம் வாசிப்பதே முக்கிய காரணமாக அமைந்தது என்றவர், மாணவர்கள் இளம் பருவத்திலேயே பாடப் புத்தகங்களுடன், நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும் அன்றாடம் நாளிதழ்களையும் படித்து தங்களது அறிவாற்றலை பெருக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் வாக்சிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, உயிர்த்தானம், இளம் இயந்திரங்கள், இலக்குகள் மாறுபடலாம், மாசில்லா உலகம் செய்வோம் ஆகிய தலைப்புகளில் தான் எழுதிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் நூலகத் தன்னார்வலர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும்… Read more: சிவகங்கை தமிழ் இலக்கிய வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா
  • உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை !
    உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ! அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. இந்த நிலையில், கறந்த பாலில் பறவைக் காய்ச்சலை பரப்பும் எச்5என்1வைரஸ் இருப்பது, மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனவே, கறந்த பாலை அருந்துவதைத் தவிர்க்குமாறும் சுத்திகரிக்கப்பட்ட பாலை அருந்துவதே பாதுகாப்பானது என்றும் உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பாலில் இருக்கும் கொடிய கிருமிகளை சுத்திகரிப்பு மூலம் அழித்துவிடலாம், இது மிகவும் எளிதானதும் கூட. தற்போது பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸானது பறவைகள், விலங்குகள், மனிதர்களிடையே பரவி வருகிறது.இந்த வைரஸானது மிக எளிதாக மனிதர்களுக்குப் பரவி அவர்களைக் கொல்கிறது. இது தற்போது வௌவால்கள், பூனைகள், கரடி, நரி, பென்குயின்களுக்கும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த… Read more: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை !
  • கனமழை காரணமாக 2வது நாளாக விமானம் ரத்து பயணிகள் போராட்டம்
    ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா போன்ற நாடுகளில் நேற்றிலிருந்து கனமழை பெய்து மோசமான வானிலை நிலவி வருகிறது. இதை அடுத்து சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் செல்லும் விமானங்களும், அந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. 2வது நாளாக துபாயில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரவு 10 மணிக்கு துபாய் செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இது குறித்து பயணிகளுக்கு உரிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுண்டரில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஆனால் அதிகாரிகள் கவுண்டரை மூடி விட்டு சென்றனர். புதுச்சேரியில் இருந்து வந்த அபிலயன் கூறுகையில், துபாய் செல்ல வேண்டிய விமானம் மழையால் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். அதிகாரிகள்… Read more: கனமழை காரணமாக 2வது நாளாக விமானம் ரத்து பயணிகள் போராட்டம்
  • சென்னை – மொரிஷியஸ் இடையே 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விமான சேவைகள்
    சென்னை – மொரிஷியஸ் இடையே 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விமான சேவைகள் தொடங்கியுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியதை அடுத்து படிப்படியாக விமான சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டன. வெளிநாடுகளுக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானங்கள் சென்றன. ஆனால் ஹாங்காங், மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்கு விமான சேவைகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஹாங்காங், மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்கு மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் சென்னை – ஹாங்காங் இடையிலான விமான சேவைகள் தொடங்கின. இந்நிலையில், சென்னை – மொரிஷியஸ் இடையிலான விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளன. சுமார் 4… Read more: சென்னை – மொரிஷியஸ் இடையே 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விமான சேவைகள்
  • துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி
    துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி துபாய் : துபாயில் தமிழ் மொழியில் இருந்து இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட”தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ” நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நூலை தமிழ் மொழியில் மதுரை விமான நிலையத்தில் சுற்றுலாத்துறை உதவி அலுவலராக பணிபுரிந்து வரும் கவிஞர் இரா .இரவி எழுதிய ” ஆயிரம் ஹைக்கூ ” நூலை இந்தியில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் மரிய தெரசா .ஆயிரம் ஹைக்கூ நூலை வெளியிட்டு நான்கு பதிப்புகள் வெளியிட்ட வானதி பதிப்பகம் இந்தி நூலையும் வெளியிட்டுள்ளது. தமிழக தொழிலதிபர் அய்யம்பேட்டை சுலைமான் வெளியிட ஊடகவியலாளர்முதுவை ஹிதாயத் பெற்றுக்கொண்டார். உடன் சுதிஷ் உள்ளிட்டோர் உள்ளனர்.