தூத்துக்குடி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கூடுதலாக புதிய மூன்று வகுப்பறை கட்டிடம், மது மற்றும் போதை மறுவாழ்வு மையம் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார் அமைச்சர் மேயா் கலெக்டா் பங்கேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி, ஜே.எஸ்நகர் தொடக்கப்பள்ளியில் கூடுதலாக புதியமூன்று வகுப்பறைகள் கட்டிடம், மது மற்றும் போதை மறுவாழ்வு மையம் ஆகிய கட்டிடங்களை கனிமொழி எம்்.பி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் கலெக்டா் இளம்பகவத், தலைமையில் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
தெற்குமண்டலத்தில் ஜே.எஸ் நகரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநில நிதி ஆணையம் பள்ளி மேம்பாட்டுமானிய உள்கட்டமைப்பு பணிகள் நிதியில் ரூ. 55 இலட்சம் மதிப்பீட்டில் 967 சதுர அடிபரப்பளவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் மற்றும் அதேப்பகுதியில் மதுமற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து வ.உ.சிதம்பரனார் துறைமுக சமூககூட்டாண்மை பொறுப்புநிதியின் பங்களிப்பில் ரூ. 2.38 கோடி மதிப்பீட்டில் 8978 சதுர அடிபரப்பளவில் இரண்டு தளங்களுடன் கூடிய மதுமற்றும் போதை மறுவாழ்வுமையம் ஆகிய கட்டிடங்களை கனிமொழி எம்.பி திறந்துவைத்தார்.
இந்த மது மற்றும் போதை மறுவாழ்வு மையத்தின் முக்கிய நோக்கமாக, மதுமற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான நபர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை மற்றும் மறுசீரமைப்பு வழங்குவது ஆகும். இதன்மூலம் அவர்கள் மீண்டும் சமூகத்தில் சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கு உதவும். இந்த மையத்தின் சிறப்பம்சங்களாக 40 படுக்கைகள் கொண்ட மருத்துவப் பயனாளி வார்டு, மருத்துவர் அறை மற்றும் சிகிச்சைஅறை, ஆய்வகம், ஆலோசனை அரங்கம், வெளிமருத்துவப் பயனாளிகள்அறை, வரவேற்புஅறை, உளவியல்அறை, கழிவறைகள், ஆவணஅறை, சமையலறை, உணவுக்கூடம், பொருட்களைச் சேமித்து வைக்கும்இடம், காத்திருப்புஅறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் ப்ரியங்கா, துணைமேயர் ஜெனிட்டா, தாசில்தாா் திருமணிஸ்டாலின், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் பிாியதா்ஷினி, மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, நிறுவனர் எம்.எஸ் செல்லமுத்து அறக்கட்டளை, மூத்த மனநல மருத்துவர் செ.ராமசுப்பிரமணியன், டாக்டா் சிவசைலம், மாநகர் நல அலுவலர் சரோஜா, மாநகராட்சி பொறியாளா் தமிழ்ச்செல்வன், நகரஅமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, சுகாதார ஆய்வாளா் ஸ்டாலின் பாக்கியநாதன், கவுன்சிலா்கள் ராஜதுரை, முத்துவேல், பட்சிராஜ், சுயம்பு, வெற்றிராஜன், வைதேகி, பவாணி, விஜயகுமாா், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமாா், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் அருணாதேவி, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜான்சன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், அணி துணை அமைப்பாளர்கள் குமரன், மைக்கேல்ராஜ், பகுதி பொருளாளர் முத்துராஜா, வட்டச்செயலாளர்கள் பிரசாந்த், நடசேன் டேனியல் ரவீந்திரன், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் லிங்கராஜா பிரபாகா், மாநகராட்சி இளநிலைபொறியாளர்கள் செல்வம், லெனின், சுகாதார தொழில்நுட்ப துறை அலுவலா்கள் சிவப்பிாிதா, ெகளாி, சரவணக்குமாா், விக்னேஷ்வரன், சுகாதார மருத்துவா் சூா்யபிரகாஷ் பள்ளி தலைமை ஆசிாியா்கள் சுகந்தி சகுந்தலா, உமாசக்தி, முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட், ராஜேந்திரன், ெபாியசாமி, முருகன், செல்வன், சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவீன்பாண்டியன், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முகஉதவியாளா் ரமேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் செவிலியா்கள் ஆசிாியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
பாக்ஸ்: மழலை செல்வங்களின் பாசமும் கனிமொழி எம்.பியின் உபசாிப்பும் முத்தையாபுரம் ஜேஎஸ் நகாில் பள்ளிதிறப்பு விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் கலெக்டா் இளம்பகவத் மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோருக்கு பூக்கள் கொடுத்து மழலை செல்வங்கள் வரவேற்றனா். பின்னா் பள்ளி அறையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. எல்லா மழலை செல்வங்களையும் உபசாித்த மக்கள் பிரதிநிதிகளும் கலெக்டரும் குழந்தை செல்வங்கள் நன்றி தொிவிக்கும் வகையில் எல்லோருக்கும் இந்த கட்டிடத்தை கட்டி கொடுத்தமைக்கு நன்றியை தொிவித்து கொள்கிறோம்என்று ஒருமித்த குரலோடு புகழ்மாலை சூடினாா்கள். முன்னதாக பள்ளி கட்டிடத்தை மழலை செல்வங்களை திறந்து வைக்க சொல்லி தானும் மகிழ்ந்தாா்.