கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல் நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கோவையில் ஆண் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் பலாத்கார கொடூர சம்பவம் மறைவதற்குள் கோவையில் நடந்த பாலியல் சம்பவம் வேதனையையும் கடும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகளை கடுமையாகயாக்குவதற்க்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும் இது போன்ற கொடூர சம்பவங்கள் தொடர்வது சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அடியோடு இழக்க செய்திருக்கிறது எனவே இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பி.எல் ஏ.ஜெகநாத்மிஸ்ரா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்