தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான கும்பகோணம் டவுன் சர்வே வார்டு 3 சர்வே எண் 1514 சதுர அடி 11452 சதுர அடி நிலம் கணபதி நகர் இபி காலனி அரசு அங்கீகாரம் பெற்ற மனை பிரிவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட osr இந்த நிலத்தை அப்பகுதியை சேர்ந்த இரண்டு பேர் கடந்த மூன்று மாதங்களாக போலி பத்திர பதிவு மூலம் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர்.இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.

அதன் பேரில் தகவல் அறிந்து சமூக ஆர்வலர்களான அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் பி. செந்தில் முருகன், சிவ சேனா கட்சி மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த்ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு ஆவணங்கள் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு இரு நீதியரசர்களும் 12 வாரங்களுக்குள் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்யுமாறு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மதுரை நீதிமன்றம் தீர்ப்பில் 12 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்ய வேண்டியும், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் ஆக்கிரமிப்பை அகற்றுமாறும் உத்தரவுகளை பிறப்பித்து மீண்டும் நீதியை நிலைநாட்டி தீர்ப்பு வழங்கிய மதுரை உயர்நீதிமன்ற இரு நீதி அரசர்களுக்கும் ,நேர்மையாக வழக்கை வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் அவர்களுக்கும், உயர்நீதிமன்றம் வரை சென்று நிலத்தை மீட்கபோராடிய சமூக ஆர்வலரான பி.செந்தில்முருகன், பூக்கடை எஸ்.ஆனந்த ஆகியோருக்கு
தெருவாசிகள் சார்பாக நன்றி தெரிவித்து அனைத்து பகுதிகளிலும் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர். இந்த சுவரொட்டிகளால் கும்பகோணம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.