தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு தமிழகம் முழுவதும் வீடுவீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுவருகிறது.
ஒரு மாதம் நடைபெறும் இப்பணியில் பிஎல்ஒ-கள் அரசியல் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிஎல்ஏ-கள் இடம் ஒரு நாளைக்கு 50 விண்ணப்ப படிவத்தை வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்து பெறலாம் என அறிவுருத்தப்பட்டது. இந்த நடைமுறை முறைகேடுகள் நடைபெற வாய்ப்பாக கூடும் என கருதியும் எஸ்.ஐ.ஆர்-யின் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்றும் அதில் எவ்வித குளறுபடியும் முறைகேடும் நடந்திட கூடாது என்று வலியுருத்தி தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஐஏஎஸ் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது மாவட்ட கழக அவைத் தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆறுமுக நயினார், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்