தென்காசி,
தென்காசி ஊராட்சி ஒன்றியம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நா.ராமஜெயா தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நா.ராமஜெயா
தென்காசி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வல்லம் எஸ் ஆர் ராமச்சந்திரனிடம் தான் அதிமுகவில் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறியுள்ளார்.
அதன்படி தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பாவை சந்தித்து அவருக்கு கைத்தறி ஆடை அணிவித்து தன்னை அதிமுக அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார், அவருக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றார்.
அப்போது அதிமுகவில் இணைந்த கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நா.ராமஜெயா கூறியதாவது:-
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ண முரளி சிறப்பாக செயல்பட்டு அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று வருகிறார்.
குறிப்பாக கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று மகளிர் சுகாதார வளாகம், பல்நோக்கு சுகாதார கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மேலும் கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி பகுதியில் பேருந்து நிறுத்த கட்டிடம் கட்டித்தருவதாக உறுதி அளித்துள்ளார்.
இது போன்று கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறார். எனவே 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா அமோக வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக நான் அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவில் இணைந்துள்ளதாகவும் தங்கள் பகுதியில் மேலும் ஏராளமான பெண்களை அதிமுகவில் இணைக்க போவதாகவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வல்லம் எஸ் ஆர் ராமச்சந்திரன், அதிமுக மாவட்ட பிரதிநிதி கணக்கப்பிள்ளை வலசை பேச்சிமுத்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜான் டேவிட் மற்றும் பாலகன் ஆகியோர் உடனிருந்தனர்.