திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள கோதண்டராமஸ்வாமி ஆலயத்தில் கடந்த ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒராண்டு நிறைவுற்ற நிலையில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக மஹோற்சவ விழா நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிவரைஸ்ரீ பகவத் அனுக்ஞை – யஜமான ஸங்கல்பம், கலஸ ஸ்தாபனம் – ஸ்ரீ ராம மந்திரம் ஹோமம் – பூர்ணாஹுதி, விசேஷ திருமஞ்சனம் – அலங்காரம் கலச அபிஷேக மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு ஸ்வாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பூஜைகளை சேங்காலிபுரம் பாலாஜி பட்டாச்சாரியர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் டி.சீதாராமன், அறங்காவலர் எஸ்.லெட்சுமணசாமி மற்றும் வலங்கைமான் பத்மசாலியர் சமூகத்தினர், ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க.மும்மூர்த்தி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.