திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டு விழா தேசபக்தி பாடலுடன் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஜவகர் சிறுவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பெ.பார்த்திபன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மஹாவீர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் இராணுவ வீரரும், ஓய்வுபெற்ற வட்டாட்சியருமான வ. முருகானந்தம் பங்கேற்று, வந்தே மாதரம் பாடல் 150 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் நாம் அனைவரும் தேசப்பற்று மிக்கவர்களாக திகழ வேண்டும் எனவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நாம் கல்வியறிவு மிக்கவர்களாக உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் வந்தே மாதரம் பாடலை பாடிய மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் சமூக ஆர்வலர் முகமது ஜியா நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.