மதுரையில் புனித பிரிட்டோ மேனிலைப்பள்ளி வீரமாமுனிவர் அறக்கட்டளை சார்பில் வீரமாமுனிவரின் 346 வது பிறந்த நாளை முன்னிட்டு பாத்திமா கல்லூரி அருகில் உள்ள வீரமாமுனிவரின் திருவுருவச் சிலைக்குப் பள்ளித்தாளாளர் அருள்தந்தை லூயிஸ் அடிகள், தலைமையாசிரியர் அருள்தந்தை மரிய அருள்செல்வம் அடிகள், உதவித் தலைமையாசிரியர் இருதய சகாயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். விழாவிற்கு வருகைபுரிந்தோரை அறக்கட்டளை செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார்.
தமிழாசிரியர் ஆரோக்கியராஜ், கவிபாடி வீரமாமுனிவரைப் போற்றி மாமுனிவரின் தமிழ்த்தொண்டு குறித்து எடுத்துரைத்தார் தத்துவப் போதகர் வீரமாமுனிவர் சிலை வளாகத்தைச் சீர்மிகு வளாகமாக மாற்றியமைக்குத் தமிழக அரசுக்கு அறக் கட்டளையின் சார்பில் நன்றி பாராட்டப்பட்டது.
சீர்மிகு மதுரைத்திட்டத்தின் கீழ் முழு உருவச்சிலை நிறுவிடவும், சிலை வளாகத்தினைத் திறப்புவாயிலோடு சீர்மிகு வளாகமாக மாற்றி அமைத்திடவும் அறக்கட்டளை சார்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பெருமக்களும், தமிழ் இவ்விழாவில் புனித பிரிட்டோ மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்கள் பிரிட்டோ இனிகோ, ஐஸ்டின் அமல திரவியம் ஆகியோரும். பிரிட்டோ பள்ளி ஆசிரியர் சங்கச் செயலர் ஜோசப் மற்றும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.