ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கழிவறை பூட்டி வைத்ததால் பயணிகள் அவதி – நகராட்சி நிர்வாகம் அலட்சியம்!

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் தினசரி பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலனுக்காக கட்டப்பட்ட இலவச பொது கழிப்பிடம் கடந்த ஒரு மாதமாக பூட்டப்பட்டு பயன்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ளது.

இதனால், தினமும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்பெறும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், குறிப்பாக பெண்கள் மற்றும் முதியோர் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். கழிவறை மூடப்பட்டிருப்பதால் பலர் வெளிப்புறத்திலேயே இயற்கை உபாதையை நீக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது சுகாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கவலைக்குரியதாக உள்ளது.

மேலும், பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி கூட இல்லாதது பயணிகளுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட தூரப் பயணத்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள், தண்ணீர் இல்லாமையும் கழிவறை வசதி இல்லாமையும் காரணமாக மிகுந்த மனஅழுத்தத்துடன் பயணித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் இதை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:

பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைவாகச் செயல்படுவது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *