திருச்செங்கோடு, நவ:9 திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மற்றும் திமுக தோழமைக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நற்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 3 சட்டமன்ற தொதகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் உமாராணி, சீனிவாசன், செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே. எஸ்.மூர்த்தி தீர்மானங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார் இந்நிகழ்வில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள எஸ்ஐஆர் சிறப்பு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கு எதிராக கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அறிவித்துள்ளபடி மாவட்ட தலைநகரங்களில் வரும் 11ந்தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொளள்ள வேண்டும் என்றும் நவம்பர் 27 தமிழ்நாடு துணை முதலமைச்சர்,இளைஞரணி செயலாளர் தஉதயநிதி ஸ்டாலின் அவர்பிறந்தநாளைக்ஷ சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது
இந்நிகழ்வில் தொகுதி பார்வையாளர்கள்,தலைமை செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள்,மாவட்ட நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,தோழமைக் கட்சியினர் எனபலர் கலந்து கொண்டனர்.