திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உத்திரவின் பேரில் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் மகேஷ் மற்றும் உதவி இயக்குனர் கண்ணன் ஆலோசனைப் படி மணக்குண்டு கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட மணக்கால் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடைகளுக்கு தடுப்பூசி,சினை ஊசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் நோய் சிகிச்சை என 200 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை உதவி மருத்துவர் கலையரசி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து சிறந்த கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கால்நடை ஆய்வாளர் மனோஜ், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மாரியப்பன், செந்தில், கார்த்திக் ஆகியோர் சிகிச்சை அளிக்க உதவி புரிந்தனர்.