கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் பா.ஜ.க வின் முகவர்கள் பயிலரங்கம்..
பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பயிலரங்கம் வடக்குப் பாளையத்தில் அமைந்துள்ள M.S.மஹாலில் நடைபெற்றது. இப்பயிலரங்கத்திற்குகிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் காவேரி மோகன்ராஜ், தொகுதி இணை அமைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மாவட்ட தலைவர் V.V. செந்தில்நாதன் பேசுகையில்:
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நேரத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களின் ஆசைகளை தூண்டி அவர்களை தன் வலையில் சிக்க வைத்து வெற்றி பெற்றனர்,
பின்பு இந்த நான்கரை ஆண்டுகள் கொடுத்த வாக்குறுதிகள் கடல் நீரில் எழுதப்பட்ட எழுத்துக்கள் போல கரைந்து விட்டது, வாக்குறுதிகள் என்ன ஆனது என கேட்கும் பொதுமக்களை,சமூக ஆர்வலர்களை,மாற்றுக் கட்சி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைப்பது, தனது கட்சி குண்டர்கள் வைத்து மிரட்டுவது என காட்டாட்சி நடத்திவரும் இந்த விடியாத திராவிட மாடல் அரசினை இந்த 2026 தேர்தலில் 100% வீட்டிற்கு அனுப்ப உள்ளனர்
மக்கள்.குண்டர்கள் மூலம் ஆட்சி நடத்தி வரும் தி.மு.க விற்கு தேர்தல் அரசியலில் மக்களே எஜமானர்கள்-மக்களே நீதிமான்கள் என்பதனை நிச்சயமாக இந்தமுறை மக்கள் உணர்த்துவதற்கு தயாராகி விட்டனர்,
ஆகவே மக்களுக்கு நாம் உறுதுணையாக அடுத்த 6 மாதகாலம் இருந்து திமுக வின் தேர்தல் நாடகத்தினை இந்த முறை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த தொகுதியில் போட்டியிட உள்ளது, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் தாமரை நின்றாலும், இரட்டை இலை நின்றாலும் நிச்சயம் வெற்றி பெறும் வகையில் செயல்பட வேண்டும்திராவிட மாடல் பேசும் திமுக வின் தோல்வி நம்ம கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடங்க வேண்டும் என கூறினார்.
இப்பயிலரங்கத்தில் மாவட்ட துணை தலைவர் சக்திவேல் முருகன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குற்பட்ட மண்டல் தலைவர்கள் சிந்தியா நடேசன், பாலுச்சாமி, சுரேஷ் , ஸ்ரீவிகான் ரமேஷ், லட்சுமணன், கவுன்சிலர் கோபிநாத் , சட்டமன்றத் பொறுப்பாளர் முருகானந்தம், கலை பிரிவு முருகானந்தம், ரெங்கநாதன் மற்றும் தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி நிலை முகவர்கள் பலர் கலந்துகொண்டனர்.