கடத்தூர்,
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை, திருக்குறள் திருப்பணிகள் திட்டம், முப்பால் பயிற்றுநர் மன்றத்தின் சார்பில் கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்டலஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருக்குறல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆசிரியர் நேத்தாஜி வரவேற்புரை ஆற்றினார். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களின் பொறுப்பாளர் மலர்வண்ணன் நோக்கவுரை ஆற்றினார். பரமசிவம், நூலகர் சரவணன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்குத் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தினர். திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குக் கடத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பச்சையப்பன், அனுமந்தன் ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினர். பள்ளி மாணவ மாணவிகள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.