மன்னார்குடி., நவம்பர்.13
வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் குடும்ப நல , சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்களுக்கான கண் பரிசோதனை முகாமை சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துராமன் தொடங்கி வைத்தார்.
மருத்துவர்கள் முகாமில் இலவச மருத்துவ பரிசோதனைகளை வழங்கினார்கள் மேலும் கண் சிகிச்சை, சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பிற பரிசோதனைகளும் நடைபெற்றது.இதில் அரசு கூடுதல் வழக்கறிஞர் அன்புச் சோழன் , மனித உரிமை ஆணையம் மாவட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர் கலைவாணன் , மூத்த வழக்கறிஞர்கள் தமிழரசன் உதயகுமார் வழக்கறிஞர் சங்க தலைவர் இளஞ்சேரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற முகாம்கள் பொதுவாக நீதிமன்ற வளாகங்கள் அல்லது சமூக மையங்களில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.