தூய்மை பணியாளர்களை தூண்டி விட வேண்டாம்-மேயர் ஜெகன்
தூத்துக்குடி மாநகராட்சியில் அவர் லேண்ட் நிறுவனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர் இதில் 1200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முன்பணமாக வழங்கப்பட்ட தொகையை சம்பளத்தில் முழுவதுமாக பிடித்து விட்டதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
என்ற விபரத்தை அறிந்த மாநகராட்சி மேயர் ஜெகன் உடனடியாக தூய்மை பணியாளர்களிடம் நேரில் வந்து குறைகளை கேட்டறிந்து அப்போது மேயர் ஜெகன் தூய்மை பணியாளர்கள் மத்தியில் பேசுகையில் தனிப்பட்ட பகையை இதில் காட்ட வேண்டாம் எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது உங்கள் கோரிக்கை என்ன என்று என்னிடம் சொல்லவும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தனிப்பட்ட பகையை காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் பத்து ரூபாய் ஐந்து ரூபாய் என்ற அவசியம் எனக்குத் தேவை கிடையாது
தொழிலாளர்களை தவறான பயன்படுத்த வேண்டாம் மாதம் 200 ரூபாய் தொழிலாளர்களிடம் வசூலிக்கின்றீர்கள் புகார் வந்துள்ளது நான் இரவு 11 மணி வரை இருக்கின்றேன். தொழிலாளர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் அவர் லேண்ட் நிறுவனம் எதுவும் செய்யவில்லை என்று தொழிலாளர்கள் கூறினார்கள் அப்போது மேயர் மீண்டும் ஜெகன் கூறுகையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்க்கலாம் தரையில் அமர்ந்து போராட வேண்டாம் எப்போதும் உங்களுடன் தான் நான் இருக்கிறேன் எனது வீட்டை சுற்றி தான் நீங்கள் குடி இருக்கின்றீர்கள்
உங்களுடைய உரிமை மறைக்கப்பட்டால் உங்களுடன் நான் போராட தயார் ஒருபோது உங்களுடைய உரிமை பறிப்போகாது உங்களை தவறான வகையில் வழியில் மீண்டும் மீண்டும் உங்களை பயன்படுத்துகிறார்கள்
என்னிடம் யாரும் பேசவில்லை நீங்கள் பணி செய்தால்தான் மாநகரம் சுத்தமாகும் அரசியலுக்காக பல பேர் குளிர் காய்கிறார்கள் உள்ளூர் காரர்களை வைத்து வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளேன். உங்களது கோரிக்கை எதுவும் வீண் போகாது கண்டிப்பாக நிறைவேற்றப்படும் நீங்கள் உங்களது வீடுகளுக்கு செல்லுங்கள் வழக்கம் போல் பணிகளை நாளை மேற்கொள்ளுங்கள் என்று மேயர் ஜெகன் தூய்மை பணியாளர்கள் மத்தியில் உருக்கமாக பேசினார் இதனை அடுத்து தூய்மை பணியாளர்கள் கலந்து சென்றனர்