தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (13/11/2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, மருத்துவமனையின் புதிய கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.