கரூர் செய்தியாளர் மரியான் பாபு

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், நாகமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த அப்பன் மு பழனிச்சாமி நகரில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியைச் சார்ந்த சொந்த வீடு இல்லாத பிறப்படுத்தப்பட்ட சுமார் 150 குடும்பங்களுக்கு அரசின் பிற்படுத்தப்பட்ட நலத் துறையின் மூலமாக நாகம நாயக்கன்பட்டி கிராம சர்வே எண்: 465-ல் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இதில், தற்சமயம் பட்டா வாங்கிய பலர் இறந்து விட்டனர். ஒரு சிலரால் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. எனினும் இன்று வரை 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

குறிப்பாக, சரஸ்வதி க/பெ. தங்கவேல் என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக மேற்படி இடத்தில் காலியாக உள்ள காலி மனையில் வீடு கட்டி குடி இருந்து வருகிறார். இவர் தான் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கோரி பல முறை பல்வேறு அரசின் சிறப்பு திட்டங்களிலும் பட்டா வேண்டி மனு கொடுத்தும் இன்று வரை பட்டா வழங்கப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா தலைமையில் காங்கயம் வட்டாட்சியரை நேரடியாக சந்தித்து உடனடியாக அப்பன் மு.பழனிச்சாமி நகரில் குடியிறுக்கும் அனைவருக்கும் வருவாய்த்துறையின் மூலமாக இ-பட்டா வழங்கிடக் கோரியும், முன்னுரிமை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்படி இடத்தில் காலி மனையில் வீடு கட்டி குடியிருக்கும் சரஸ்வதி க/பெ. லேட் தங்கவேல் என்பவருக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்கிடக் கோரி மனு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணைத்தலைவர் மாதவன்,தலித் விடுதலை இயக்க திருப்பூர் மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *