திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திருவாரூரில் அடையாள வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீட்டெடுத்தல, 1.04.2003க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போதுநடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்,ஆசிரியர்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பனிக்காலமாக வரன்முறை படுத்தும் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ ஜியோ திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுதாகர்,மணிமாறன்,ரகுபதி ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.