தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கிராமத்து சேர்ந்த ரமேஷ் இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் இளைஞர். இவருக்கு சமூக சேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர் ஒரு whatsapp குழுவை ஏற்படுத்தி அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களுக்கு அவரால் ஆன சிறு சிறு உதவிகளை செய்து வருவதும்.. யாருக்காவது அவசரத் தேவைக்கு ரத்தம் தேவை எனத் தெரிந்தவுடன், ரமேஷ் மற்றும் கிராமத்து இளைஞர்கள் தன்னிச்சையாக முன்வந்து ரத்த தானம் செய்து உயிர்களைக் காக்கின்றனர்.
ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது இனம், மதம், பாகுபாடின்றி உயிர் இழப்பும் ஏற்படா வண்ணம் ரத்த தானம் செய்து வருகின்றனர் குறிப்பாக இந்த ஒரு வாரத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ரத்த தானம் செய்து வருகின்றனர் .
இவர்களின் சேவையை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்நோயாளியாக உள்ள கா்ப்பிணிகள், தாய்மாா்கள் மற்றும் பிற சிகிச்சைகள் பெறுவோருக்கு அவசர கால தேவையின் பொருட்டு ரத்தம் தேவைப்படுவோருக்கு இவர்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.