திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒன்றிய, நகர வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம் எல் ஏ தலைமை வகித்தார்,
கூட்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் கே.சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ஆர்.ஜி.பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை முகவர்களாக பிஎல்ஏ-2 எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆர்.காமராஜ் எம்எல்ஏ வழங்கினார்.
முகவர்கள் தங்களது பணியில் இடர்பாடுகள் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும். அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற ஆலோசனைகளை பெற வேண்டும். இந்த பணியில் முகவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். முகவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு ஆர். காமராஜ் எம் எல் ஏ கூறினார்.