திருவாரூர்,

14 ஆவது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனை ஒட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து 14வது ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றி கோப்பையை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த ஐந்தாம் தேதி அறிமுகப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 14 ஆவது ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டியின் சின்னத்தினை எடுத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிறது.
அதன்படி திருவாரூர் வருகை தந்த வெற்றி கோப்பையை விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் சிலம்பாட்டங்கள் மூலம் மாணவ மாணவிகள் வெற்றி கோப்பையுடன் ஊர்வலம் நடத்தியது கான்பரை வெகுவாக கவர்ந்தது.
திருவாரூர் ரயில் நிலையத்தில் துவங்கிய இந்த ஊர்வலமானது திருவாரூர் பழைய பேருந்து நிலையம், பணகல் சாலை, தெற்கு வீதி, வழியாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்று இறுதியாக வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.
தொடர்ந்து 14வது ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை வெற்றி சின்னமான காங்கேயனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திறந்து வைத்தார்.