தாராபுரம் செய்திகள் பிரபு
செல்:9715328420
வ.உ.சிதம்பரனார் 89 ஆம் ஆண்டு நினைவு நாள்..!
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வ.உ.சி. பேரவை சார்பில் அண்ணா சிலை அருகே செக்கிழக்கு செம்மல் வ.உ.சி. சிதம்பரனாரின் 89ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி மரியாதையுடன் நடைபெற்றது.
இந்த நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் உலகநாதன் தலைமையிலும், செயலாளர் சிவா முன்னிலையும் வகித்தனர். பொருளாளர் முத்துக்குமார், பேரவை நிர்வாகிகள் மணிகண்டன், சரவணன், ஆறுமுகம், குணசேகர், சபரிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதலில் வ.உ.சி. சிதம்பரனாரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தனர். பின்னர் மழை தூவி அஞ்சலி செலுத்தி, அவரது தியாகத்தையும் தேசப்பற்றையும் நினைவு கூர்ந்தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவரும், வ.உ.சி.யின் விடுதலைப் போராட்ட பங்களிப்பு குறித்து உரையாற்றி, இளைஞர்கள் அவரது வாழ்க்கைச் சிந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தினர்.