முகவரி மாறிய வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்களை தர கோரிக்கை
ஈரோடு நவம்பர் 18: முகவரி மாறியவாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய எஸ் ஐ ஆர் படிவங்களை வழங்க கோரி ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் அதன் தலைவர் இஸ்தகீர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜாபர் சாதிக், மற்றும் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் அர்ஷத் தலைமையில் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்
அவர்கள் கூறியதாவது பல இடங்களில் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு எஸ் ஐ ஆர் படிவங்கள் வழங்காததால் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் ஏற்கனவே அரசியல் கட்சி கூட்டத்தில் உரிய படி தேர்தல் ஆணையம் விலாசம் மாறிய வாக்காளர்கள் வீடுகளில் அவர்களின் எஸ்ஐ ஆர் படிவங்கள் ஒட்டப்படும் என்றனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூன்று முறை அந்த வீட்டிற்கு வந்து அந்த படிவங்களை புகைப்படம் எடுத்து செல்வார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்பொழுது படிவங்கள கேட்டாலும் இடம் பெயர்ந்து வாக்காளர்களுக்கு தருவதில்லை.
அதற்கு மாறாக தற்போதைய எஸ் ஐ ஆர் பணிகள் முடிந்த பிறகு படிவம் ஆறு வழங்கி புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும் என கூறப்படுகிறது. இது அவர்களுக்கு பெரும் சிரமத்தை உருவாக்கும். எனவே எஸ் ஐ ஆர் படிவங்களை வீடு மாறியவர்களுக்கும் வழங்க வேண்டும்.
அவர்களையும் வாக்காளர் பட்டியல் சேர்க்க வேண்டும். எஸ் ஐஆர் படிவம் தரும் தேதி, பெற்றுக் கொள்ளும் தேதி நீடிக்கப்பட வேண்டும என்று கோரிக்கை விடுத்தனர். தேர்தல் ஆணைய குறிப்பு படி 17 சதவீதம் எஸ் ஐ ஆர் படிவங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே இவ்வாறு வீடு மாறிய வாக்காளர்களுக்கு தேடிச்சென்று படிவங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்