தூத்துக்குடி மாநகரில் ஜார்ஜ் சாலை என்பது தூத்துக்குடி மாநகரின் முத்தான சாலையாகும். பெருபகுதி மக்கள் இச்சாலையை பயன்படுத்துவார்கள். இப்பகுதில் வசிப்போர் காமராஜ் கல்லூரி, திச்செந்தூர் பகுதிகளுக்கு செல்வோர் பெரிய அறிவில் பயன்படுத்துவார்கள். நகரில் இருந்து துறைமுகம், மீன் பிடித்துறைமுகம், தெர்மல் மற்றும் அப்பகுதிகளுக்கு செல்வோர் இச்சாலையை பயன்படுத்துவார்கள்.
பீங்கான் ஆபீஸ் முதல் ஆல்பர்ட் அன் கோ வரை சாலை மிகவும் பழுதாகி போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது. அந்த ரோடு பேவர் பிளாக் போடப்பட்டதால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி குளமாக உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது
தற்போது வடகிழக்கு பருவ மழை காலமாக உள்ளதால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எனவே மாகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு நிரந்தர தார்சாலை அமைக்க தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.