துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் கிளை நூலகத்தில் 17-11-2025அன்று போட்டித்தேர்வு மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. துறையூர் கிளைநூலக வாசகர் வட்டம் மற்றும் துறையூர் ரோட்டரி சங்கம் இணைந்து 58-வது தேசிய நூலக வார விழா போட்டித்தேர்வில் பங்கேற்பவர்கள் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டும் நிகழ்சியாக சிறப்பு சொற்பொழிவு துறையூர் கிளை நூலக அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வாசகர் வட்டத்தலைவர் தி.நடராஜன் தலைமை தாங்கினார். துறையூர் ரோட்டரி சங்க தலைவர் இ.ஆனந்த, வாசகர் வட்ட பொறுப்பாளர் ஓய்வுபெற்ற புள்ளியல் துறை அலுவலர் ந.தில்லைநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பங்கேற்றவர்களை நூலகர் பெ.பாலசுந்தரம் வரவேற்றார்.
இவ்விழாவில் திருச்சி கேர் அகாடமி இயக்குனர் பேராசிரியர் முத்துச்செல்வன் கலந்துக்கொண்டு பேசுகையில் , மாணவர்கள் போட்டித்தேர்வு ஏதாவது குறிப்பிட்ட தேர்வில் மட்டும் கலந்துக்கொள்ள வேண்டும் என்றில்லாமல் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்கும் வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தாங்கள் பங்கேற்கும் தேர்வுகளில் ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் வழிகாட்டுதல் மற்றும் பின்பற்றிய கடின பயிற்சி, தினசரி நாளிதழ்கள் மூலம் அன்றாட நிகழ்வுகள் வாசிப்பு இவற்றை வழிகாட்டுதலாக கொண்டு போட்டித்தேர்வில் வெற்றிப்பெற்று ஒவ்வொருவரும் அரசுபணியை பெறவேண்டும் என்று பேசினார்.
இவ்விழாவில் வாசகர் வட்ட துணைத்தலைவர் வேணுகோபால், மூத்த உறுப்பினர் து.சி.ராஜமாணிக்கம், தேவராஜ், ரோட்டரி சங்க பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் கலியமூர்த்தி, மகேஸ்வரன், போட்டித்தேர்வு மாணவர்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நூலக பணியாளர்கள் மு.உமாமகேஸ்வரி, வீ.கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இறுதியாக ரோட்டரி சங்க செயலாளர் இரா.பாஸ்கர் நன்றி கூறினார்.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்