டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய தொழிலாளர் நல வாரிய ஒருங்கிணைப்பு மையங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த முனைவர் ஆனந்த் முருகன் அவர்கள் அகில இந்திய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
இதுகுறித்து இன்று சென்னை திரும்பிய முனைவர் ஆனந்த்முருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்
மத்திய தொழில்துறை அமைச்சகத்தால் அங்கீகாரம் பெற்ற டி யு சி சி என அழைக்கப்படும் அகில இந்திய தொழிலாளர்நல மையம் இந்தியா முழுவதும் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டதாகும் இதன் தேசிய மாநாடு டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது நடைபெற்ற மாநாட்டில் தேசியநிர்வாகிகள் என்னை அகில இந்திய துணைத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்
இதற்கு நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறதாகவும் மேலும் 22 மாநிலங்களில் சிறப்புடன் செயல்படும் எங்கள் சங்கம் தொழிலாளர் நலன் குறித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது எனவும் தற்போது இந்தியாவில் உள்ள மாநிலங்களில் செயல்படும் அரசுதொழிலாளர் நல வாரியங்களில் தீர்க்கப்படாத தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்வு காண்பது மற்றும் வரும் ஆண்டு ஜனவரி மாதம் எங்கள் சங்கம் சார்பில் இந்தியாவில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் ஒன்றிணைத்து மிகப்பெரும் அளவில் தொழிலாளர் நலன் குறித்த மாநாடு ஒன்றை நடத்த போவதாகவும் தெரிவித்தார் நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் முனைவர் ஆனந்த முருகன் அவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு வரவேற்புஅளித்தனர்.