திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில், மூலவர் ஆதிபுரீஸ்வரர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாககவசம் திறப்பு நிகழ்வு, டிச., 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, கோவில் உதவி ஆணையர் நற்சோனை தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அதன்படி, மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வில் பல லட்சம் பேர், திரள்வர். அதற்காக, கோவில் வளாகம் முழுவதும் செட் அமைக்கப்படும். மேலும், குடிநீர், கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மேலும், சிசிடிவி கேமராக்கள் கோவில் வளாகம் மற்றும் மாடவீதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கினால் விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உதவி கமிஷனர் நற்சோனை கூறினார்.