திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 38- ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் காலை 10- மணிக்கு இயக்க கொடியை தலைமை ஆசிரியர் ஓய்வு தஞ்சை வி.கிருஷ்ணமூர்த்தி ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து வலங்கைமான் வட்டார சங்கத் தலைவர் சி.நடராஜன் தலைமை வகித்தார், மாநில துணைத் தலைவர், நாகை மண்டலத் தலைவர் மன்னை ந.இராசகோபாலன் முன்னிலை வகித்தார், வட்ட துணைத் தலைவர் டி.ஆனந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார், வட்டார செயலாளர் ஏ.பெருமாள் ஆண்டறிக்கை வாசித்தார்,

வட்டார பொருளாளர் சிவ.மருத.சுந்தரம் நிதிநிலை அறிக்கையை வாசித்தார், தணிக்கையாளர் ஏ.தனிகாசலம் தீர்மானம் முன்மொழிதல் செய்தார். வட்டார இணைச் செயலாளர்கள் வி.பிரகாசா, கே.ராமதாஸ் ஆகியோர் வழிமொழிதல் செய்தார்கள். குடவாசல் ஏஇஓ ஓய்வு வி.மாணிக்கவேலு, வட்டார துணைத் தலைவர் பி.இராஜேந்திரன், வலங்கைமான் சார்நிலை கருவூல அலுவலர் பி.பேபி சசிகலா, கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் ஜெ.அசோக்ராஜ், மத்திய கூட்டுறவு வங்கி வலங்கைமான் கிளை மேலாளர் டி.அன்பழகன், வலஙகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் சி.சரவணன், பாத அழுத்த நிபுணர் தாராசுரம் கே.உத்தமன், வட்டார தலைவர்கள் வடுவூர் வீர.சம்பந்தமூர்த்தி, குடவாசல் தீப.செல்லத்துரை, திருத்துறைப்பூண்டி ஆர்.ராஜாராமன், நீடாமங்கலம் எம்.ஆர்.சுரேஷ்பாட்ஷா, திருவிடைமருதூர் சி.கலியமூர்த்தி, கும்பகோணம் பி.இராமதாஸ், கீழ்வேளூர் சி.தங்கமோகன், வேதாரண்யம் எஸ்.இராஜகிருஷ்ணன், மன்னை ஆர்.நடராஜன், திருவாரூர் ஆர்.கலியமூர்த்தி, திருக்குவளை எஸ்.கிருஷ்ணன், நன்னிலம் எஸ்.கலியமூர்த்தி, மயிலாடுதுறை கோவி.சுந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இயக்க பேரூரையை மாநில துணைத் தலைவர், நாகை மண்டலத் தலைவர் மன்னை ந.இராசகோபாலன் ஆற்றினார். வலங்கைமான் மகளிரணி தலைவி கே.எஸ்.எஸ்.ஜோதிபாய் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார், முடிவில் வட்ட பிரதிநிதி கண்டியூர் வி.அய்யாசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *