தேனியில் சட்டமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் மாவட்ட கலெக்டர் ஆய்வு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத்பீடன் உதவி இயக்குனர் நில அளவை அப்பாஸ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக் கதிரவன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் பொது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கவிதா மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா.நல்லதம்பி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்