இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் உயர்ந்தராஜன். இவர் கடலாடி அரசு மேல்நி லைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். சப், ஜூனியர் கபடி போட்டிகளில் கேப்டனாக தமிழக அளவில் நடைபெற்ற போட்டிகளில் இந்த மாணவன் தேர்வு பெற்றார்.
மேலும் இந்திய கபடி குழுவில் விளையாடி வருகிறார். தமிழ்நாடு ஜூனியர் அணியின் கேப்டனாக பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார். ஆகையால் இந்திய கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு அளவிலும், மாவட்ட அளவிலும் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சப், ஜூனியர் போட்டியில் இராமநாதபுரம் மாவட்டம் கபடி குழு கேப்டனாக செயல்பட்ட உயர்ந்தராஜன் தங்க கோப்பையை வென்றார்.
பீகாரில் நடைபெற்ற சப், ஜூனியர் போட்டியில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்திய கபடி குழு சார்பில் பக்ரைன் நாட்டில் நடைபெற உள்ள 2025 ஆசியன் கபடி கேம்ஸ் போட்டியில் விளையாட தேர்வாகி உள்ளார். வறுமையில் வாடும் இந்திய கபடி வீரருக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், வனத்துறை அமைச்சர். ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களிடம் உதவி கோரி மனு அளித்துள்ளார்.