அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் ஆகியவைகள் இணைந்து அரியலூர் அண்ணா சிலை ஆர்ப்பாட்டம் நடந்தது தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

தோட்டக்கலை உதவி இயக்குனர் கந்தசாமி தலைமை தாங்கினார் தோட்டக்கலை உதவி அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார் உதவி அலுவலர்கள் ரவிதுரை அரங்கநாதன் மோகன்ராஜ் தோட்டக்கலை அலுவலர் பிரகாஷ் ராஜபாண்டியன் மற்றும் கவிதா தமிழருவி பத்மா கனிமொழி உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

வேளாண்மை வல்லுனர் குழுவை அமைத்திட வேண்டும் தமிழக அரசே தமிழக அரசே தோட்டக்கலைத் துறை வளர்ச்சியை உறுதி செய்திடு நிறுத்திடுக நிறுத்திடுக தோட்டக்கலை வளர்ச்சி பாதிக்கும் UATT 2.0 திட்டத்தை கைவிடுங்கள் தமிழக அரசே தமிழக அரசே தோட்டக்கலை துறை வளர்ச்சி உறுதி செய்திடு என்பன போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் முழங்கினார்கள் சுமார் இரண்டு மணி நேரம் இந்தப் போராட்டம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *