வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.

லக்னோவில் நடைபெறும் சாரண சாரணிய இயக்கத்தில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் பாரத சாரண- சாரணிய இயக்கத்தின் சார்பாக 19-வது தேசிய பெருந்திரள் அணி, நவம்பர்-23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தின் சார்பாக திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் இருந்து அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சார்ந்த 8 சாரண மாணவர்களும் ஒரு சாரண ஆசிரியரும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் சாரண மாணவர்களுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் திண்டுக்கல் கல்வி மாவட்ட சாரணச் செயலர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் கங்காதரன், மாவட்ட சாரண அமைப்பு ஆணையர் பாலமுருகன், மாவட்ட உதவி செயலர் ஜான் கிரிஸ்டோபர் மற்றும் சாரண மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *