சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
சென்னை.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா எனும் தலைப்பில் நடத்திய கலந்துரையாடலில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா உள்பட ஓட்டபிடாரம்; சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை சந்தித்தார்.
தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் திமுக உள்ளடக்கிய மாவட்ட செயலாளர்கள் அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் தொகுதி களநிலவரம், மக்கள் மனநிலை, அரசு செய்த சாதனைகள் எந்த அளவிற்கு வரும் தேர்தலில் நமக்கு சாதகமாக அமையும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறியும் போது பல ஒன்றிய செயலாளர்கள் தங்களது தந்தை மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆற்றிய பணிகளையும் பொறுப்புக்களையும் எடுத்துக் கூறி அவரது மகன்கள், வாரிசுகள் என்ற கருத்தையும் பதிவு செய்தனர்.
எல்லா கருத்துக்களையும் கேட்டறிந்த நிலையில் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டு வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவதற்கு செயல்பட வேண்டிய நிலை குறித்து அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி உடனிருந்தார்.பின்னர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்;துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் நிர்வாகிகள் பலர் சந்தித்து கலந்துரையாடினர்.