தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமஹாபிரத்தியங்கிராதேவிக்கு அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் மஹா யாகம் நடைபெற்றது.

  சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் காலை 10மணிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் தொடங்கி அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகம் மற்றும் பக்தர்கள் வாழ்வில் கடன், எதிரித்தொல்லைகள் யாவும் நீங்கிடவும், இல்லத்தில் செல்வங்கள் பெருகிடவும், திருமண வரம், குழந்தை பாக்யம் கிடைத்திட வேண்டி மஹா பிரத்தியங்கிராதேவிக்கு மிளகாய் வற்றலுடன் மஹா யாக வழிபாடு நடைபெற்று மஹா காலபைரவருக்கும், பிரத்தியங்கிராதேவிக்கும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளாக பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மஹா யாகத்திற்கான ஏற்பாடுகளை மகளிரணியினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *