தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோரின் முன்னிலையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி கல்லூரியில் அனைத்து துறைகள் சார்பில் முன்னாள் மாணவியர் சங்கக் கூட்டம் நடைபெற்றன

குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் எஸ். பத்மபிரியா அனைவரையும் வரவேற்றுப் பேசினார் . கல்லூரி நிறுவன செயலர் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் வணிகவியல் துறை முன்னாள் மாணவி ஜெ. அழகு ராணி வணிகவியல் துறை ஆய்வு கூடத்திற்கு அன்பளிப்பாக ரூபாய் 10.000 மும் தகவல் தொழில்நுட்பவியல் துறை முன்னாள் மாணவிகள் அன்பளிப்பாக ரூபாய் 10,000 வழங்கினார்கள். துறை சார்பில் ஆண்டு மலர் megaziine வெளியிட்டனர்.

கல்லூரி பேராசிரியர்கள் முன்னாள் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர் இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் 230 ககும் மேற்பட்ட தங்களின் கல்லூரி காலத்தில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது மேலும் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக முன்னாள் மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பவியல் துறை உதவி பேராசிரியை சி. வாசுகி நன்றி கூறினார் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *