தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தமிழ்நாடு அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை காரமடை எஸ்வி ஜிவி பள்ளி மாணவி தக்ஷிதாவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு.
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அக்டோபர் 2 தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநில அளவிலான சப் ஜூனியர் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் 12 பேர் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில் காரமடை எஸ்வி ஜிவி பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தக்ஷிதா தமிழ்நாடு அணிக்காக தேர்வாகி விளையாடினார் தமிழக பெண்கள் அணி இப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது.
தமிழக அணியில் விளையாடி விளையாடிதங்கப்பதக்கம் வென்ற அணி க்கு ரூபாய் 3 லட்சம் ரொக்க பரிசு பெற்றது. தமிழ்நாடு அணிக்காக விளையாடி பெருமை சேர்த்த எஸ்வி ஜி வி பள்ளி மாணவி தக்ஷிதாவிற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
மேலும் இந்திய பள்ளி களுக்கான விளையாட்டு குழுமம் நடத்திய 2025- 26 ஆம் ஆண்டிற்கான 69 வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரமடை எஸ்விஜிவி பள்ளி மாணவி அக்ஷிதா மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் மாணவர் அகில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
17 வயதுக்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் ஸ்மிதா, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்-வாலிபால் போட்டியில் மாணவர் பிரிவில் 19 வயதுக்கு உட்பட்டோ பிரிவில் விஜேஷ் குமார் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் ஜனவர்ஷினி தேசிய வாலிபால் அணிக்கு தேர்வாகியுள்ளார் 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் பிரகன்யா தேசிய அளவில் சதுரங்க அணிக்காக தமிழ்நாடு அணி சார்பில் தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் ஈட்டி எரிதல் போட்டியில் எஸ்விஜிவி பள்ளி மாணவன் சுதிக்ஷன் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடை பெற்ற போட்டியில் மூன்றாம் இடம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சாதனை மாணவ, மாணவிகளை எஸ்வி ஜிவி பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் பழனிச்சாமி, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், முதல்வர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன், அறங்காவலர் தாரகேஸ்வரி, நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார், பொருளாளர் ரத்தினசாமி அறங்காவலர்கள் ராஜேந்திரன், வேலுச்சாமி மற்றும் பயிற்சியாளர்கள் மாரியப்பன், கிரி, பாபு,அஜித், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகர், ரம்யா காயத்ரி, ஆசிரிய ஆசிரியர்கள், பாராட்டி வாழ்த்தினார்.