“தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 100- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “கலைஞர் தமிழ் -100 “என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியினை பொதிகைத் தமிழ்ச் சங்கம் நடத்துகிறது.இப்போட்டியில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் கல்லூரி மாணவ மாணவிகளும், பொதுமக்களும் பங்கேற்கலாம்.

இது தொடர்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் பே.இராஜேந்திரன் என்ற கவிஞர் பேரா தெரிவித்திருப்பதாவது…

” தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 100- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “கலைஞர் தமிழ்- 100” என்கின்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கத்தினை பொதிகைத் தமிழ்ச் சங்கம் வருகிற ஜூன் மாதம் 7 -அன்று பாளையங்கோட்டையில் நடத்துகிறது .

இந்தக் கருத்தரங்கினை முன்னிட்டு “கலைஞர் தமிழ்- 100” என்கின்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டியினையும் அறிவித்திருக்கிறது.

இந்தப் போட்டியில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். கலைஞரின் தமிழ்ப் பணிகள் பற்றிய விவரங்களோடு “கலைஞர் தமிழ்- 100” என்கின்ற தலைப்பில் முழு வெள்ளைத் தாளில் நான்கு பக்க அளவில் கட்டுரைகளை கைப்பட எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ இந்த மாதம் 31-ஆம் நாளுக்குள் பெயர் ,முகவரி மற்றும் அலைபேசியின் புலன எண்ணுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் .

கவிஞர் பேரா,
தபால் பெட்டி எண் :103, பாளையங்கோட்டை, திருநெல்வேலி -627002.

நடுவர்களால் தேர்வாகும் முதல் இரண்டு கட்டுரைகளுக்கு முறையே தலா ரூபாய் 2000 மற்றும் ரூபாய் 1000 என பணப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ஜூன்- 7 அன்று பாளையங்கோட்டையில் நடக்க இருக்கும் “கலைஞர் தமிழ்- 100” என்கிற பன்னாட்டுக் கருத்தரங்கில் வைத்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும் .

கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் மேற்படி கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும் .கருத்தரங்கில் கலந்து கொள்கின்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். பரிசுகள் நிகழ்ச்சியில்வைத்துதான் வழங்கப்படும்.”

இவ்வாறு பே.இராஜேந்திரன் என்ற கவிஞர் பேரா தெரிவித்திருக்கிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *