தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, குண்டடம் ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட கழக செயலாளரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி இன்று குண்டடம் வருகை தந்தார்.

இதையடுத்து, நாளை நடைபெற உள்ள தேர்தல் பிரசாரப் பணிகள் மற்றும் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து குண்டடம் மேற்கு ஒன்றிய கழக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மு.பெ. சாமிநாதன் மற்றும் மாவட்ட கழக செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் பிரசாரப் பணிகள், நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இதில் கரூர் மாவட்ட கழக செயலாளரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி, உடுமலை சட்டமன்ற உறுப்பினர் மு. ஜெயக்குமார், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் குட்டி (எ) சுதாகர், கோவை மாவட்ட கழக செயலாளர்கள் தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட கோவை மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நாளை நடைபெற உள்ள தேர்தல் பிரசாரத்தை சிறப்பாக மேற்கொள்வது தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *