செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெருங்கருணை கிராமம் கனக மலை குன்றின் மீது அருள்மிகு மரகத தண்டாயுதபாணி திருக்கோயிலில் உள்ள மூலவர் சிலையான மரகத கல்லாலான தண்டாயுதபாணி சிலை கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி இரவு கோவிலின் பூட்டை உடைத்து சிலை திருடி சென்றனர்.


அதன் பின்னர், செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை 6 ஆய்வாளர்களைக் கொண்டு
தனி படை அமைத்து தீவிர விசாரணை செய்தனர்.
இந்த சிலை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த
3 பேரை கைது செய்தனர் குற்றவாளிகள் அளித்த வாக்கு மூலத்தின் படி கோயிலின் பின்புறம் உள்ள மூடப்பட்ட கல்குவாரியின் குட்டையில் இருந்து மரகதண்டாயுதபாணி சிலையை போலீசார் மீட்டெடுத்தனர்.


அதன் பின்னர், மரகத தண்டாயுதபாணி சிலை
செய்யூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. செய்யூர் தாசில்தார் கருவூலத்தில்
பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார்.


சென்னை எழும்பூர் நீதிமன்ற உத்தரவுப்படி கோயிலின் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்குப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இந்த உத்தரவு ஆணையினை பெற்ற செய்யூர் வட்டாட்சியர் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சிலை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.


சித்தாமூர் கூட்ரோடு பகுதியில் இருந்து மின்விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாட்டுக்கு பின்னர் அருள் பாலித்தார்.
ஏராளமான முருக பக்தர்கள் புடைச்சூழ ஊர்வலமாக கோயிலுக்கு வந்தார் மரகத முருகர்.
அதன் பின்னர், கோயிலின் மலை மலை அடிவாரத்தில் மரகத தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டப்பட்டது.

கோயிலின் மூலவராக ஆகம விதிப்படி பூஜைகள் செய்த பின்னர் மூலவர் இருந்த இடத்தில் மீண்டும் நிர்மாணிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *