இரட்டைமலை சீனிவாசன் திருஉருவ சிலைக்கு மேயர் ஜெகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை ஆதித்தமிழர் புரட்சி கழகம் சார்பில் போல்டன்புரம் பகுதியில் உள்ள திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் 81 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு திமுக செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
மேலும் மேயர் ஜெகன் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு புகழஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன். திமுக மாமன்ற உறுப்பினர் முத்துவேல். திமுக நிர்வாகிகள் ராமர். பேச்சிமுத்து உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.