கூடலூரில் 2 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி, 28 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. கூடலூர் அருகே ஓவேலி லாரிஸ்டன் பகுதியில் ஆகஸ்ட் மாதம் 2 பேரை புலி கொன்றது, புலியை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது கூடலூர் ஊட்டி ,கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சில்வர் கிளவுட் என்ற பகுதியில் சோதனை சாவடி அருகே வைக்க பட்ட கூண்டில் புலி சிக்கியது.. சிக்கிய புலி முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.